Thagadoor Munnetram TV
யூடியூப் வீடியோ பார்க்க படத்தை அழுத்தவும்
மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

தருமபுரி (தகடூர்) செய்திகள்!

14/10/2021->Ayutha Pooja photo

தருமபுரி நகரம் தகடூர் முன்னேற்றம் அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 வரை சிறப்பாக நடைபெற்றது.

14/10/2021->Ayutha Pooja photoAyutha Pooja photo

தருமபுரி நகரம் INCERD அலுவலகத்தில் ஆயுத பூஜை இன்று மதியம் 12.00 மணி முதல் 12.30 வரை சிறப்பாக நடைபெற்றது.

28/10/2020 அன்பு ட்ரஸ்ட், கம்பைநல்லூர் (Anbu Trust, Kambainallur)  anbu_trust_bank இந்நிகழ்ச்சியில் ARDS-NGO இயக்குனர் J.ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
Tngb வங்கி FLC கருத்து வழங்கையில்
1.ATM repayக்கு மட்டும் 200000வரை காப்பீடு வங்கிகள் செய்யும் நாம் இறந்தால் நம் வாரிசுகளுக்கு இத்தொகை கிடைக்கும்
2.வட்டி விகிதம் கடன் தொகையை பொறுத்து மற்றும் விவசாயம் ,வியாபார கல்வி ,மருத்துவம் இதற்க்கும் வட்டி விகிதம் மாற்றம் உண்டு
3.வங்கிக்கு வங்கி செயல்பாடு மற்றம் உண்டு
4.தேசிய வங்கிகள்,தனியார் செயல்பாடு பற்றி விபரமாக பேசப்பட்டது
5.ரிசர்வ் வங்கி-நபார்டு வங்கி எப்படி மற்ற வங்கிகள் கட்டுப்படுத்தும் விதம் பற்றியும்
6.MFI நுண்கடன் பற்றி அதன் வரையறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு கிராம் வங்கி கிருஷ்ணகிரி மண்டல FLC -m.முருகன் அவர்கள் கருத்துக்கள் வழங்கினார்.
முடிவில் S.அறிவுகனி ARDS ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார்.

28/10/2020  kadamadai_collectorate தருமபுரி மாவட்டம் அக்டோபர் 2 8.10.2020 அரசாணைப்படி குறைந்த பட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த கோரி தருமபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்கம் ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி சம்மேளனம் மாவட்ட தலைவர் தோழர் என் ‌மனோகரன் தலைமை வகித்தார் முன்னிலை தோழர்கள் என் ‌சரவணன் ஜீ.குப்புசாமி எம் ‌தேவராஜ் சி. மாதையன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் தோழர் எம். மாதேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார் உள்ளாட்சி சம்மேளனத்தின் உடைய மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர் ராமமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார் கண்டன உரை தோழர் எம் சரவணன் மாவட்ட துணைச் செயலாளர் முனிசிபல் பஞ்சாயத்து பொதுப் பணியாளர் சங்கம் எம் ராஜமாணிக்கம் மாவட்ட பொருளாளர் பொதுப் பணியாளர் சங்கம் ஆட்டோ தொழிற்சங்கம் தோழர் கந்தசாமி லட்சுமணன் மாவட்ட துணைத்தலைவர் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஜே. தமிழ் வாணன் மாவட்ட பொருளாளர் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே மணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் 500 தோழர்களுக்கு மேல் பங்கேற்றனர் நன்றி உரை தோழர் வணங்காமுடி பிஎஸ்என்எல் ஓய்வு கோரிக்கைகள் :நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் படுத்து 62 அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்து உள்ளாட்சி பணியாளர்களுக்கு 50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் அனைவருக்கும் வழங்கு 16 3 2020 சட்டமன்றத்தில் அறிவித்த ஊதிய உயர்வு அரசாணை வெளியீடு கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு மாத சிறப்பு ஊதியத்தை வழங்கும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கப்பட்டது
20/10/2020  hanumanthapuram கிராமப் பஞ்சாயத்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. லீலாவதி அவர்கள் 20.10.2020 செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய சந்திப்பு நடந்தது. அதற்கு பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு சார்ந்த கணினிப் பயிற்சி – DTP மற்றும் Web Site Design ஆகிய படிப்புகள் பற்றிய பயிற்சிஅளிப்பதாக திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் உறுதி அளித்தார். நாளை (21.10.2020) முதல் 1 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிப்பதாக உறுதி செய்யப்பட்டது. பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து தருவதாக திருமதி. லீலாவதி, பஞ்சாயத்துத் தலைவர், திருமதி. தீபா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆகியோர் உறுதியளித்தனர். இந்த சந்திப்பை செல்வி. திவ்யா மற்றும் பரத், ஒருங்கிணைப்பாளர்கள், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆலோசனைக் கூட்டம் இனிதே முடிவடைந்தது.
18/10/2020  hanumanthapuram கிராமப் பஞ்சாயத்து தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம். 18.10.2020 காலை 11 மளியளவில் வன்னியகுல க்ஷத்திரியர்கள் சங்கம் - பொறுப்பாளர்கள் சந்திப்பு. ஏற்பாடு : திரு. பார்த்தசாரதி, மாநில வளைதளக்குழு. ஒரு மாதத்தில் 50 கிளைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
13/08/2020 அன்பார்ந்த ஹவுசிங் போர்டு குடியிருப்பு கடமடை பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய வேண்டுகோள்,
பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள தேசிய கொடி கம்பத்தில். ஆகஸ்டு மாதம் சனிக்கிழமை 15ம்தேதி காலை 8மணி அளவில் 74 சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
அது சமயம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு கடமடை பொது மக்கள் மற்றும் மாணவர் மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு ஹவுசிங் போர்டு குடியிருப்பு பொது மக்கள் சார்பாகவும் மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நல சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
பி.கணேசன் தலைவர்
என்.சரவணன் செயலாளர்
மகாகவி பாரதியார் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்கம்
ஹவுசிங் போர்டு குடியிருப்பு பொது மக்கள் ஹவுசிங் போர்டு குடியிருப்பு,
கடமடை பாலக்கோடு வட்டம்
தருமபுரி மாவட்டம்
9750074726
07/08/2020 pchettihalli 05/08/2020  கணபதி (பெல்ரம்பட்டி) கிராமப் பஞ்சாயத்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கணபதி (பெல்ரம்பட்டி) கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திரு. சுப்பிரமணி அவர்கள் 05.08.2020 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய சந்திப்பு நடந்தது. அதற்கு பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிப்பதாக திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் உறுதி அளித்தார். இந்த சந்திப்பை திரு. பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் மற்றும் அவருடைய நண்பர் மாதம்பட்டி திரு. முருகேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
04/08/2020
anbu trust
    கொங்கம் மழை பொழிய 
        குடவனாறு தண்ணீர் வர
    ஆனை மழை பொழிய
        அமராந்து தண்ணீர் வர
    நல்ல மழை பொழிய
        நன்காஞ்சி தண்ணீர் வர
    கனத்த மழை பொழிய
        காஞ்சிமாநதி தண்ணீர் வர
    காடு மழை பொழிய
        காம்பிலி தண்ணீர் வர
    வானம் மழை பொழிய
        வாணிநதி தண்ணீர் வர
    வையம் மழை பொழிய
        வையாபுரி தண்ணீர் வர
    சீலம் மழை பொழிய
        மணிமூத்தாறு தண்ணீர் வர
    கொல்லி மழை பொழிய
        கொல்லியாறு தண்ணீர் வர
    உரத்த மழை பொழிய
        உப்பாறு தண்ணீர் வர
    பாரில் மழை பொழிய
        பாலாறு தண்ணீர் வர
    பொங்கும் மழை பொழிய
        பொன்னிநதி தண்ணீர் வர
    ஆனியில் அரை ஆறு
        தலையாடி முழுப்பெருக்கு!!
                    
   #நீர்நிலைகளைப்பயன்படுத்துவோம்
   #நீராதாரங்களைப்_பயன்படுத்துவோம்
   #நீரே_வாழ்வு
   #பல்லுயிர்கள்சூழ்உலகு. 
    சீ. பூவேந்தரசு, 
    மேலாண்மை அறங்காவலர், 
    அன்பு அறக்கட்டளை, 
    கடத்தூர் & கம்பைநல்லூர், 
    தருமபுரி மாவட்டம்.
    

03/08/2020 :

பார்...தமிழகமே... பார். “பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”

அவர்கள் விரும்புவதெல்லாம், பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?

1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?

2. RPT பட்டாவா ?

3. Sub-Division பட்டாவா?

என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு, யார் யாருக்கு எவ்வளவு?

அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு, A.T க்கு ,D.T க்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு,

அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க லஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,

அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு, நம் சொத்துக்கு, நம் பெயரில் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவதுதான் VAO க்கள் விரும்பும் சிறந்த முறையாம்.

அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், லகரங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ?

தங்கள் தினசரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கா 53 வருட ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஆனாலும் மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை லஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால் எதிர்க்கும் அளவுக்கு VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டியே வேண்டும் !

VAO க்களே வாழ்க உங்கள் தைரியம் !!
01/08/2020 : vhp 🚩விஷ்வ ஹிந்து பரிஷத் தர்மபுரி மாவட்டம் தருமபுரி நகரம் சேலம் தர்மபுரி கோட்டா பொருளாளர் சைதன்யா தாசா தலைமையில் பஜ்ரங் தல் குழுவினர்களுக்குபயிற்சி முகாம் ஆனது நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் கனகராஜ் நகர பஜ்ரங்தள் அமைப்பாளர் மேகநாதன் செயலாளர் தீபக் துணை செயலாளர் அசோகன் துணை பொருளாளர் தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩
D.P. Kanagaraj





01/08/2020 :

தருமபுரி மாவட்டத்தில் ஸ்ரீ தெய்வானை வேளாண்மை கல்வி நிறுவனம், பெரியாம்பட்டியில்

news_10Rs_iyakkam பத்து ரூபாய் இயக்கம் சார்பில் சமுக இடைவெளியுடன் அறிமுகம் கலந்தாய்வு மற்றும் கலந்தாய்வில் தீர்மானம் போடப்பட்டது.
1. 2024 க்குள் ஊழலற்ற உள்ளாட்சி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்த்திலும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
2. உறுப்பினர் சேர்க்கை விரைவு படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
30/07/2020 :

தருமபுரி மாவட்டம், சோகத்தூர் ஊராட்சிக்கு ௨ட்பட்ட, பாப்பிநாயக்கனஹள்ளி கிராமத்தில்

௨ள்ள நாவிதர் நகரில், மழைகாலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியேறுவதற்கு ௭ந்தவித ௮டிப்படைவகதிகளும் செய்து தரப்படவில்லை, சாலை வசதிகளும் இல்லை,ஒகேனக்கல் குடிநீர், மேல்நிலை நீர்தேக்கதொட்டி, கழிவுநீர் கால்வாய்,மற்றும் இதர ௮டிப்படை வசதிவேண்டி பல ஆண்டுகளாக, மாவட்ட ஆட்சியர் ௮லுவலகம், வட்டார வளர்ச்சி ௮லுவலகம், மற்றும் இறுதியாக மாண்புமிகு முதல்வர் ௮வர்களின் தனிப்பிரிவிற்கும் மனு ௮னுப்பியுள்ளேன்.இது நாள்வரையிலும் ௮டிப்படைவசதி செய்து கொடுக்க ௭ந்தவித நடவடிக்கையும் ௭டுக்கப்படவில்லை. நான் ௮ளித்த மனு ௮னைத்தும் பதிவிட்டுள்ளேன்.

இப்படிக்கு,
ஆனந்தகுமார்
தருமபுரி மாவட்ட ஒன்றிய செயலாளர்,
பத்து ரூபாய் இயக்கம்,
௮லைப்பேசி ௭ண்- 6382444654
29/07/2020

கம்மாளப்பட்டி கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

News3
💪 இப்படிக்கு, விஜயகுமார், பஞ்சாயத்து துணைத் தலைவர், வார்டு 7, கம்மாளப்பட்டி ஊராட்சி.

counseling 28/07/2020 : ஹவுசிங் போர்டு குடியிருப்பு
கடமடை ஏர்ரனஹள்ளி அஞ்சல்
பாலக்கோடு வட்டம்
தருமபுரி மாவட்டம்.

அனுப்புதல்
என்.சரவணன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
ஹவுசிங் போர்டு குடியிருப்பு
கடமடை ஏர்ரனஹள்ளி அஞ்சல்
பாலக்கோடு வட்டம்
தருமபுரி மாவட்டம்

பெறுதல்
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தருமபுரி

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம் நன்றியுடன்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி ஊராட்சி அல்லிநகர் குடியிருப்பு பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீணாகிறது ஜீலை 3 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் பதிவு செய்யப்பட்டது மாவட்ட ஆட்சியர் அவர்கள் புகார்கள் பதிவு செய்யும் வாட்ஸ் ஆப் எண் நடவடிக்கை இல்லாத வாட்ஸ் ஆப் எண்ணா எதற்கு என்று புரியவில்லை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் பணியாளர்கள் வேலை செய்யாமல் ஊதியம் பெறும் துறையா? இன்றுவரை நடவடிக்கை இல்லை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடந்த இருபது நாட்களாக வீணாகிறது என்று தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றால் யார் நடவடிக்கை எடுப்பது அங்கு அங்கு கிராமத்தில் தண்ணீர் வரவில்லை என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளன ஆனால் இவ்வளவு தண்ணீர் வீணாய் போவது தினசரி ஆயிரக்கணக்கான லீட்டர் தண்ணீர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை இது முழுக்க முழுக்க மெயின் லைன் தண்ணீர் ஊராட்சிக்கு சம்மந்தம் இல்லை ஊராட்சி செயலாளர் வேலு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலக்கோடு தெரிவித்து ஆய்வு செய்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து 15 நாட்கள் மேலாக நடவடிக்கை இல்லை என்றால் பொது மக்கள் புகார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலக்கோடு அதிகாரி கூறியும் வேலை செய்யாமல் கண்டுகொள்ளாத சூழ்நிலை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலக்கோடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தோழமையுடன்
என்.சரவணன்.
counseling 27/07/2020 : இன்று, 27.7.2020, இராஜரிக்ஷி. வீரவன்னியன் அர்த்தநாரீஷ வர்மா அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுகிறோம்..!
வணங்குகிறோம்.!!
அவரது கட்டளைகளான...
கல்வியைப்படி!!
கள்குடியை மற!!
கட்சிகளை விடு!!
பூணூலை அணி!!
க்ஷத்திரியனாக இரு!!
இவைகளை கடைபிடித்து க்ஷத்திரியர்களாக செயல்படுவோம்!!
முன்னேறுவோம்.. என உறுதியேற்போம்..
நன்றி.
இப்படிக்கு.
Dr.S. தமிழரசன்
தலைவர்.
வன்னியகுல ஷத்திரியர்கள் சங்கம், தருமபுரி.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமப் பஞ்சாயத்து செய்திகள்


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திரு. S. சென்னமூர்த்தி அவர்கள் 19.07.2020 ஞாயிறு காலை 11.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார். 13 இளைஞர்கள் திருவாளர்கள் பெரியசாமி, மணி, தவமணி, நவீங்குமார், அருண்குமார், ப்ரதாப், சக்திவேல், செல்வதுரை, நந்தகுமார், ஜெயச்சந்திரன், கவுரன், அன்பு மற்றும் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார். இறுதியாக திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அண்ணாமலைஅள்ளி கிராமப் பஞ்சாயத்து செய்திகள்


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அண்ணாமலைஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. சத்தியவாணி அவர்களை 18.07.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சந்தித்து இந்த பஞ்சாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்வது தொடர்பாக பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி, நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் சென்று கலந்தாலோசனை நடத்தினர். அவர்களுடன் திருமதி. நந்தினி, வார்டு 5 உறுப்பினர் மற்றும் திரு. குமார், செயலர் அவர்களும் உடனிருந்தனர். விரைவில் கலந்தாலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

கம்மாளப்பட்டி கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

17/07/2020 : News1News1
17/07/2020 : தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கம்மாளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் +2 வகுப்பில் மொத்தமாக 38 பேர் மாணவர் மற்றும் மாணவியர்கள் பயின்று முழுதேர்ச்சி பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது💪.
...சரஸ்வதி மாதையன், வார்டு 5, கம்மாளப்பட்டி ஊராட்சி.

பேளாரஅள்ளி கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

14/07/2020 :career couselling discussion தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. M. ராதா மாரியப்பன் அவர்கள் 14.07.2020 செவ்வாய் காலை 11.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவதற்காக திரு. மாரியப்பன் அவர்கள் சிறப்பு பேச்சாளரான பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம் (INCERD, CEO, SOFTWARE DEVELOPMENT COMPANY) அவர்களை அழைத்து வந்து ஆலோசனை நடத்தினர். அடுத்த 15 நாட்களுக்குள் அந்தப் பகுதி மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

சாமனூர் கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

நாள்: 12-7-2020, 10.00am – 11.00am

counseling தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சாமனூர் கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. அம்பிகா பாக்யராஜ் அவர்கள் 12.07.2020 ஞாயிறு காலை 10.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம் (INCERD, CEO, SOFTWARE DEVELOPMENT COMPANY), தருமபுரி அவர்களை தலைமை விருந்தினராக அழைத்திருந்தனர். திரு. பாக்யராஜ் மற்றும் திரு. காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தனர். 2 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார்.

திருவாளர்கள் சந்திரசேகர், B.Com, சண்முகம், B.Com. ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றார்கள். இறுதியாக திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

கொரவாண்டஅள்ளி கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

நாள்: 11-7-2020, 11.00am – 1.00pm

career development programme
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொரவாண்டஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. சரோஜா சுந்தரேசன் அவர்கள் 11.07.2020 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம் (INCERD, CEO, SOFTWARE DEVELOPMENT COMPANY), தருமபுரி அவர்களை தலைமை விருந்தினராக அழைத்திருந்தனர். திரு. சுந்தரேசன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் 1 மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார். 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர்.

சொற்பொழிவு முடிந்தபின் இளைஞர்கள் மற்றும் மகளிர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார்.

திருவாளர்கள் சாந்தகுமார் (BE CSE), சுதாகர் (BE CSE), பார்த்திபன் (B.Sc. Agri), அஸ்வினி(B.Sc. Chemistry), ரம்யா (M.Sc. Microbiology ), நிவேதிதா, B.Sc., B.Ed. (Physics), ரஞ்சித் (B.E. ECE) ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றார்கள். இறுதியாக திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

சாமனூர் கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

06/07/2020 : தருமபுரி(ம)பாலக்கோடு(வ)சாமனூர்ஊராட்சிக்கு உட்டபட்ட நல்லம்பட்டி முதல் அருள்பிரகாஷ் வீடு வரை நீண்ட காலமாக இந்த தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியா நிலையில் இருந்தது இதற்கு மாறாக எங்கள் தலைவர் குட்டி(எ)வெங்கடேசன் உடனடி நடவடிக்கை எடுத்து அனைவரும் பயன்படும் வகையில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைத்தார்!!!!!!நம்மை காக்க!!! நாம் காக்க வேண்டியது தண்ணீர்💧 பணத்தை தண்ணீராக செலவழி என்று சிலேடையாக சொல்ல முடியாது🤷🏻‍♂ இன்று தண்ணீரை பணம் போல் சிக்கனமாக செலவழி என்னும் நிலைமைதான் உலகெங்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை புரிந்து கொள்வோம் பசுமையின்றி நீரில்லை🌾 மரம் வளர்ப்போம் மழை பெறுவும் இருக்கும் நீராதாரத்தை💧உயிராக காப்போம்.......🖤❤

இங்கணம்...அம்பிகா பாக்யராஜ், பஞ்சாயத்து தலைவர், சாமனூர்
water issue photos

சாமனூர் கிராமப் பஞ்சாயத்து, பாலக்கோடு (வ), தருமபுரி (மா)

30/06/2020 : நீரின்றி அமையாது உலகு... மனிதனின் அன்றாட வாழ்க்கையில் உணவின்றி வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லையென்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது. சாமனூர் கீழ் தெருவில் இந்த தண்ணீர் பிரச்சனை 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து இன்று இடைவிடா முயற்சியுடன் தலைவர் வெங்கடேசன்(எ) குட்டி, கவுன்சிலர் லாவண்யா ராஜா அவர்களின் செயல்பாட்டின் மூலம் வீட்டின் அருகே தண்ணீர் வருகிறது.

இங்கணம்...அம்பிகா பாக்யராஜ், பஞ்சாயத்து தலைவர், சாமனூர்

water issue photos
03.11.2019 :
hindu_bramham