பாவகம் விளக்கம்
1 விதி - உடல் அமைப்பு - வாழ்க்கையின் நோக்கம் - அழிக்க முடியாத அங்க அடையாளம்

குண நலன் – பிறவி இயல்பு – உடலின் அமைப்பு – உடலின் நிறம் – செல்வாக்கு நிலை – ஆன்ம பலம் – மன இயல்பு – ஆயுள் பலம் – ஆடை – ஆபரணம் – மனக் கவலை – துக்கம் – கனவு

2 தனம் - குடும்பம் - வாக்கு - அடிப்படைக் கல்வி - கவனம்

பால கல்வி – தனம் – வாக்கு – குடும்ப நிலை – வலது கண் – அதிஷ்டம் – சகல சாஸ்திரப்புலமை – மறுத்துப் பேசுதல் – எதிர்வாதம் செய்தல் – வீண் பேச்சு பேசுதல் – நண்பரால் வருமானம் – அந்நியரை அண்டிப்பிழைத்தல் – ஆடை அலங்காரம் – தங்கம் – நவரத்தினம் – உண்ணும் உணவு – கோபம் - வஞ்சனை

3 இளைய சகோதரம் - எண்ணம் - எழுத்து - இயக்கம் - மாமனார் - முயற்சி

தனது காரியம் – வெற்றி – வேலையாட்கள் – இசை – உடலின் பலம் – தைரியம் – காதின் அணிகலங்கள் – காது நோய்கள் – உணவுப் பாத்திரம் – தொழிலின் அபிவிருத்தி – முதலாளித் தன்மை – பூமி லாபம் – சுப காரியங்கள் – வசதி – பாதம் – கழுத்து – நல்ல எண்ணம் – உணவுக்கு கஷ்டமாகும் நிலை – சாமர்த்தியம் – போர் – தாய் சம்பந்தப்பட்ட கவலை - போகம்

4 தாய் - சுகம் - வண்டி - வாகனம் - வீடு - மனை - உயர்கல்வி

வித்தை – தொழில் திறமை – வாகனம் – வீடு – நிலம் – வியாபாரம் – சுகம் – வெற்றி – உறவினர்கள் – புதையல் – பால் – பசு – கன்று – திருக்கோவில் – மருந்து வகைகள் – ஆட்சி அதிகாரம் – கல்வித் திறமை – நறுமணம் – நண்பர் – வேடிக்கை விளையாட்டு – கனவு – தந்தை பற்றிய கவலை – பிரயாணம் – விரதங்கள் – நீர் மற்றும் இருப்பிடத்தால் லாபம் (மாத்ரு ஸ்தானம் / சுக ஸ்தானம்)

5 குழந்தை - குல தெய்வம் - தந்தை வழி தாத்தா - காதல் - அறிவு

குழந்தை பாக்கியம் – பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? – அக்குழந்தை நல்லவரா கெட்டவரா – தாய் தந்தையரை வைத்துக் காப்பாற்றுவாரா இல்லையா – பூர்வ புண்ணியம் – தந்தையின் தந்தை – வாரிசுகள் – மந்திர உபதேசம் – வேதங்கள் பற்றிய கல்வி – புத்திக் கூர்மை – நீதி சாஸ்திரம் – பத்திரிக்கை – நல்ல வார்த்தை – அயல் தேசத்தினால் கவலை – பொதுக்கூட்ட பேச்சு

6 நோய் - எதிரி - கடன் - அடிமைத் தொழில் - அரசு அடிமை - எதிரியின் பணம்

சிறிய நோய் – தாய் மாமன் – கடன் தொல்லை – எதிரிகளாலும் ஆயுதத்தாலும் காயம் – தாயாதிகளின் கலகம் – தன் உடலுக்கு நேரும் துன்பம் – பொருள் இழப்பு – திருட்டு பயம் – நீரினால் ஆபத்து – சிறை வாசம் – காரியங்களில் தடங்கல் – சந்தேகம் – மெதுவான போக்கு – தீயவரின் நட்பு – குரூர செயல் – பிறரை நிந்தனை செய்தல் – பெண் சம்பந்தப்பட்ட வியாதிகள் – விஷப் பிராணிகளால் ஆபத்து – மிருகங்களால் உயிர் ஆபத்து (ருண, ரோக, சத்ரு ஸ்தானம்)

7 களஸ்திரம் (கணவன்/மனைவி) - நண்பர்கள்

வாழ்க்கைத் துணை எப்படி அமையும் – திருமணம் – சிற்றின்பம் – வழக்கு விவகாரங்கள் – சுற்றம் – நட்பு – வெகுமதிகள் – திருமணக் காலம் – கணவன் (அ) மனைவியின் அழகு – ஜவுளி வியாபாரம் – போக சக்தி – கணவன் (அ) மனைவியின் சுக துக்கம்

8 அதிகப்படியான நோய் -எதிரி - கடன் - திடீர் அதிஷ்டம் - மேலிரிந்து கீழே விழுதல் - உயிர் ஸ்தானம் - மாங்கல்ய ஸ்தானம் - விபத்து

ஆயுள் பலம் – ஆயுள் முடிவு எப்படி? – நீதிமன்ற வழக்குகள் – பிரச்சனைகள் – காரியத் தடங்கல் – தீராத கவலை – மாங்கல்ய பலம் – அவமானம் – செலவுகளால் துன்பம் – நீங்கா பகை – வீண் அலைச்சல் – பழி பாவம் – களத்திர விரோதம் – பயம் (அஷ்டமஸ்தானம்)

9 தந்தை - பாக்கியம் - விருப்ப தெய்வம் - ஆராய்ச்சிக் கல்வி

தர்மம் – தந்தையின் சொத்து – நீர் நிலைகளை ஏற்படுத்துதல் – ஆலயத் திருப்பணி – குருவின் மூலம் உபதேசம் –குருவைச் சார்ந்த சேவைகள் – சந்ததி விருத்தி – விசுவாசம் – ஆலய தரிசனங்கள் – நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்தல் – உடன் பிறப்பால் துக்கம் – அதிஷ்டம் (பாக்கிய ஸ்தானம்)

10 சுய தொழில் - மாமியார்

தொழில் வலிமை – கர்மம் – நகரத்தை உருவாக்குதல் – அன்பு – முன்னோருக்கு செய்யும் கடமை – தெய்வ வழிபாடு – புகழ் – மானம் – வெளிநாட்டுச் செய்திகள் – அதிகாரம் மிக்க பதவி – ஆட்சி அதிகாரம் (தசம ஸ்தானம், தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம்)

11 லாப ஸ்தானம் - மூத்த சகோதரர்

மூத்த சகோதரர் – இளைய மனைவி – பொதுத் தொண்டு புரிவோர் – தனது திறமை மூலம் லாபம் பெறுதல் – விவசாயம் – தொழில் – கிணறு – தெளிவான சிந்தனை – வாகன வசதி – கௌரவம் – சாஸ்திர அதிகாரம் – லாப நட்டங்கள் – செய்யும் தொழிலின் மேன்மை – உண்மை – பெண்களை ஆதரித்தல் – வெளிநாட்டு பிரயாணம் (லாப ஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம்)

12 அயனம் - சயனம் - உறக்கம் - விரயம் (சுப / அசுப) - வெளிநாட்டுக் கல்வி

ஒருவர் செய்த பாவ புண்ணியத்தின் பலன் – நிம்மதியான தூக்கம் – வெளிநாட்டு தொழில் – பணச் செலவால் சுகம் கிடைக்கும் நிலை – மறு பிறவி – தியாகம் செய்தல் – வேள்வி செய்தல் – தாய் மாமனால் பெறும் சுக துக்கங்கள் – கட்டுப்படுதல் – தந்தையின் தாய் – தாயின் தந்தை – பாவ புண்ணியம் கருதி செய்யும் செலவு – இவற்றால் ஏற்படும் விரயச் செலவு (விரைய ஸ்தானம், அயன, சயன, போக ஸ்தானம்)