தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***
மாவட்டம் : தருமபுரி
தலைமையகம் : தருமபுரி
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு : : 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை : மொத்தம் : 15,06,843
ஆண்கள் : 7,74,303
பெண்கள் : 7,32,540
நகர்ப்புற மக்கள் : 2,60,912
கிராமப்புற மக்கள்: 12,45,931
பாலின விகிதம் : 946/1000

முக்கிய நதிகள் : காவேரி, சின்னார் மற்றும் வாணியார் ஆகியவை. சிறிய நதி மற்றும் நீரோடைகள் சனத்குமார நதி

சுற்றுலாத் தளங்கள் : ஓகேனக்கல், தீர்த்தமலை


வரலாறு

1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.

புவியமைப்பு (எல்லைகளாக)

வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம்
கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள்
தெற்கில் சேலம் மாவட்டம்
மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டம்

காலநிலை

பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும்.
ஆண்டிற்கு சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது.

கல்வி

கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கூறப்படுகின்றது.
தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும்.
இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட குறைவானது.

மக்கள் வகைப்பாடு (http://www.censusindia.gov.in)

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள்.

சட்டமன்ற தொகுதிகள்

57 - பாலக்கோடு
58 - பென்னாகரம்
59 - தருமபுரி
60 - பாப்பிரெட்டிபட்டி
61 - அரூர்

பாராளுமன்ற தொகுதி-தருமபுரி

பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் - 57-பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி, 60-பாப்பிரெட்டிபட்டி, 61-அரூர், 85-மேட்டூர்

மாவட்ட வருவாய் நிருவாகம்

தருமபுரி மற்றும் அரூர் என இரண்டு வருவாய் கோட்டங்கள்
7 வருவாய் வட்டங்கள்
23 உள்வட்டங்கள்
470 வருவாய் கிராமங்கள்

வருவாய் வட்டங்கள் – 7

1. தருமபுரி, 2. அரூர், 3. பாலக்கோடு, 4. பாப்பிரெட்டிப்பட்டி, 5.பென்னாகரம், 6.காரிமங்கலம், 7.நல்லம்பள்ளி

உள்வட்டங்கள் – 23

தர்மபுரி, கிருஷ்ணாபுரம், நல்லம்பள்ளி, இண்டூர், பாளையம்புதூர், பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியானஹள்ளி, வெள்ளிச்சந்தை, பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, சுஞ்சல்நத்தம், அரூர், தீர்த்தமலை, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி

கிராம ஊராட்சிகள்

தருமபுரி மாவட்டமானது 10 வட்டங்களாகவும் 251 கிராம ஊராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி-28

அதகப்பாடி, அக்கமனஅள்ளி, ஆண்டிஅள்ளி, அ.கொல்லஅள்ளி, அளேதருமபுரி, கடகத்தூர், கொண்டம்பட்டி, கொண்டகரஅள்ளி, கோணங்கிநாய்க்கனஅள்ளி, கோடுஅள்ளி, கிருஷ்ணாபுரம், குப்பூர், இலக்கியம்பட்டி, மூக்கனூர், நாய்க்கனஅள்ளி, கே.நடுஅள்ளி, நல்லசேனஅள்ளி, நூலஅள்ளி, புழுதிக்கரை, செம்மாண்டகுப்பம், செட்டிக்கரை, சோகத்தூர், திப்பிரெட்டிஅள்ளி, உங்குரானஅள்ளி, வெள்ளாளப்பட்டி, வெள்ளோலை, வி.முத்தம்பட்டி, முக்கல்நாய்க்கன்பட்டி.

நல்லம்பள்ளி-32

அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, பண்டஅள்ளி, பேடரஅள்ளி, பொம்மசமுத்திரம், பூதனஹள்ளி, தளவாய்அள்ளி, தின்னஅள்ளி, டொக்குபோதனஹள்ளி, எச்சனஅள்ளி, ஏலகிரி, எர்ரபையனஅள்ளி, இண்டூர், ஏ.ஜெட்டிஅள்ளி, கம்மம்பட்டி, கோணங்கிஅள்ளி, இலளிகம், மாதேமங்கலம், மானியதஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, நாகர்கூடல், நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, பாகலஅள்ளி, பாலவாடி, பாளையம்புதூர், பங்குநத்தம், சாமிசெட்டிப்பட்டி, சிவாடி, சோமேனஅள்ளி, தடங்கம், தொப்பூர்.

பென்னாகரம்-23

ஆச்சார அள்ளி, அஞ்சேஅள்ளி, அரசாகசனஹள்ளி, பிளியனூர், சின்னம்பள்ளி, கிட்டனஹள்ளி, கலப்பம்பாடி, கூத்தப்பாடி, கூக்குட்டமருதஅள்ளி, மஞ்சநாய்கனஅள்ளி, மாதேஅள்ளி, மாங்கரை, ஒன்னப்பகவுண்டனஅள்ளி, பள்ளிப்படடி, பனைக்குளம், பருவதன அள்ளி, பிக்கிளி, சத்தியநாதபுரம், செங்கனூர், தித்தியோப்பனஅள்ளி, வட்டுவனஅள்ளி, வேலம்பட்டி, வேப்பிலைஅள்ளி

ஏரியூர்-10

அஜ்ஜனஹள்ளி, பத்ரஹள்ளி, தொன்னகுட்டஹள்ளி, கெண்டையானஹள்ளி, கொடிஹள்ளி, மஞ்சாரஹள்ளி, பெரும்பாலை, ராம்கொண்டஹல்லி, சுஞ்சல்நத்தம், நாகமரை

பாலக்கோடு-32

அ.மல்லாபுரம், அத்திமுட்லு, பெலமாரனஅள்ளி, பேளாரஅள்ளி, பூகானஅள்ளி, பேவுஅள்ளி, சிக்கமாரணடஅள்ளி, சிக்கதேரனபெட்டம், தண்டுகாரனஅள்ளி, எர்ரனஅள்ளி, கும்மனூர், கொலசனஅள்ளி, குட்லானஅள்ளி, கணபதி, கெண்டேனஅள்ளி, ஜெர்த்தலாவு, கொரவாண்டஅள்ளி, கம்மாளப்பட்டி, கரகதஅள்ளி, காட்டம்பட்டி, எம்.செட்டிஅள்ளி, மோதுகுலஅள்ளி, நல்லூர், பஞ்சப்பள்ளி, பி.செட்டிஅள்ளி, புலிக்கரை, பாடி, சூடனூர், சாமனூர், பி.கொல்லஅள்ளி, செல்லியம்பட்டி, செக்கோடி

காரிமங்கலம்-30

அடிலம், பொம்மஅள்ளி, பைசுஅள்ளி, காளப்பனஅள்ளி, மொட்டலூர், பந்தாரஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, முருக்கம்பட்டி, பூமண்டஹள்ளி, திண்டல், எர்ரசீகலஅள்ளி, இண்டமங்கலம், கேத்தனஅள்ளி, மகேந்திரமங்கலம், முக்குளம், புலிக்கல், பேகாரஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கெரகோடஅள்ளி, கும்பாரஅள்ளி, மல்லிக்குட்டை, பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பிக்கனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, அனுமந்தபுரம், ஜக்கசமுத்திரம், கோவிலூர், நாகனம்பட்டி.

பாப்பிரெட்டிப்பட்டி-19

அதிகாரப்பட்டி, ஆலாபுரம், பையரநத்தம், பொம்மிடி, போதக்காடு, பூதநத்தம், இருளப்பட்டி, மெணசி, மஞ்சவாடி, மோளையானூர், மூக்காரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, பட்டுகோணாம்பட்டி, புதுப்பட்டி, கவுண்டம்பட்டி, வெங்கடசமுத்திரம், சித்தேரி

அரூர்-34

அச்சல்வாடி, அக்ரஹாரம், பையர்நாய்க்கன்பட்டி, சின்னாங்குப்பம், தொட்டம்பட்டி, எல்லபுடையாம்பட்டி, கோபிநாதம்பட்டி, ஜம்மனஹள்ளி, கோபாலபுரம், கொளகம்பட்டி, கீரைப்பட்டி, கொக்கராப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கோட்டப்பட்டி, கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், மோபிரிப்பட்டி, மாம்பட்டி, மருதிப்பட்டி, மத்தியம்பட்டி, நரிப்பள்ளி, பே.தாதம்பட்டி, பறையப்பட்டிபுதூர், பெரியப்பட்டி, பொன்னேரி, செட்ரப்பட்டி, சிட்லிங், செல்லம்பட்டி, தீர்த்தமலை, வடுகப்பட்டி, எம்.வெளாம்பட்டி, வீரப்பநாய்க்கன்பட்டி, வேப்பம்பட்டி, வேடகட்டமடுவு

மொரப்பூர்-18

பன்னிகுளம், தாசிரஅள்ளி, K. ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி, இருமத்தூர், ஜக்குப்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, கெலவள்ளி, கொசப்பட்டி, கொங்கராபட்டி, கெரகோடஅள்ளி, மொரப்பூர், நவலை, போளையம்பள்ளி, இராணி மூக்கனுhர், சாமண்டஅள்ளி, தொப்பம்பட்டி, வகுரப்பம்பட்டி

கடத்தூர்-25

பசுவாபுரம், புட்டிரெட்டிபட்டி, சிந்தல்பாடி, கோபிசெட்டிபாளையம், குருபரஹள்ளி, ஒஸஹள்ளி, கர்த்தானுர், கெத்துரெட்டிபட்டி, லிங்கநாய்கன்ஹள்ளி, மணியம்பாடி, மொட்டங்குறிச்சி, மாடத்தஹள்ளி, நல்லகூடலஹள்ளி, ஒப்பிலினைக்கனஹள்ளி, ராமியனஹள்ளி, ரேகடஹள்ளி, சில்லாரஹள்ளி, சுங்காரஹள்ளி, சாந்தப்பட்டி, தாளநத்தம், தாதனூர், தென்கரைக்கோட்டை, வகுத்துப்பட்டி, வெங்கடத்தரஹள்ளி, புளியம்பட்டி.
Hogenakkal
sendrayaperumal temple
theerthagiryar temple
kottai koil
Fjords
வாணியார் அணை
சுப்ரமணிய சிவா நினைவகம்