சங்ககாலத்தில் அதியமான் என்னும் அரசன் தகடூரை ஆண்டு வந்தார். தகடூர் யாத்திரை என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் [1] மீதோ பாடப்பட்ட நூலாகும். சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்.
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர் பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), திப்பு சுல்தான் இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று தருமபுரி மாவட்டம் நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் டிசம்பர் 02, 2008 ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
தர்மபுரி, தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி நகரமாகும். தர்மபுரி நகரம் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.பாகம் எண் |
வார்டு எண் |
தெருவின் பெயர் |
ஆண் |
பெண் |
3-ம் பால் |
மொத்தம் |
---|---|---|---|---|---|---|
108, 109 | 1 | முத்துசாமி தெரு, பெரியபையன் சந்து, குருசாமி தெரு, தாதன் சந்து, மருள்காரன் தெரு, மசூதி தெரு, மகமதுஷா தெரு, காளியப்பன் தெரு, அம்பேத்கர் தெரு, புதிய திருப்பத்தூர் ரோடு, பழைய மொரப்பூர் இரயில்பாதை ரோடு, கிருஷ்ணகிரி ரோடு | 919 | 955 | - | 1874 |
110, 111 | 2 | ரத்தினம் வீதி, பெரமன் வீதி, ஆனைக்காரன் வீதி, ராஜகோபால் வீதி, பெரியண்ணன் தெரு, பச்சியப்பன் வீதி, ரங்கசாமி வீதி, புத்திரன் சந்து வீதி, கருப்பண்ணன் சந்து வீதி, கோவிந்தன் வீதி, தாயப்பன் தெரு, சோழராஜன் சந்து வீதி, இராமன் சந்து வீதி, திருப்பத்தூர் ரோடு, பீமன் தெரு நெ1, பீமன் தெரு எண் 2 | 670 | 733 | 1 | 1404 |
112 | 3 | இங்கா மெயின் ரோடு, கீரைதோட்டவீதி, முனுசாமி ரோடு, கே.வி.ரத்தினம் வீதி, மேட்டு மாரியம்மன் கோவில் தெரு, மாணிக்கம் தெரு, பச்சியப்பன் தெரு, விருந்தாடியம்மன் கோயில் தெரு, பெருமாள் தெரு, சின்னுமேஸ்திரி சந்து, புட்டு தாசி சந்து, ஜடையன் சந்து, காளியப்பன் சந்து, எச்.முனியன் வீதி, காமாட்சியம்மன் தெரு, பஜனைகோயில் தெரு, தர்மலிங்கம் சந்து, வெள்ளோலையான் சந்து, குப்பன் சந்து, முனியன் சந்து வீதி, மந்திரி சந்து, புட்டன் சந்து, தாதன் சந்து, சங்கரன் சந்து | 618 | 716 | - | 1334 |
114, 115 | 4 | இப்ராஹிம் ரோடு, நபி தெரு, உருது பள்ளி ரோடு, அப்துல் கரீம் தெரு, கவுஸ் தெரு, சந்தைப் பேட்டை தெரு, அமீனா குப்புசாமி ரோடு, குள்ளப்பன் தெரு, பாவாடை வீதி, சதாசிவம் தெரு, குப்புசாமி ரோடு, ராஜா வீதி | 761 | 708 | - | 1469 |
116 | 5 | கோட்டை கோவில் தெரு, ஜாகீர்தார் ரோடு, மாணிக்கம் தெரு, ஆசாத் தெரு, கூடு தெரு, மன்னார் தெரு, இஸ்மாயில் ரோடு, ராகவன் தெரு | 648 | 733 | - | 1381 |
117, 118 | 6 | பாபா தெரு, இப்ராஹீம் குடோன் தெரு, அப்பாஸ் தெரு, சாப்தீன் ரோடு, மக்கான் தெரு, காண் தெரு, சிசுபால் தெரு, டாக்டர் தர்மலிங்கம் ரோடு, டேக்கீஸ் பேட்டை | 759 | 818 | - | 1577 |
119 | 7 | வடகரை கால்வாய் வீதி, குப்பன் தெரு, நத்தப்பட்டியான் வட்டம், பூவாடை காவேரியம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் வீதி, குப்பன் கிழக்கு வீதி, பச்சமுத்து வீதி, ராமசாமி தெரு, சண்முகம் தெரு, சைதாமியான் தெரு, ராஜாப்பேட்டை ரோடு, நாராயணன் வீதி, நடுபையன் வீதி, காவேரி வீதி, பெரியபையன் வீதி, ஜடையன் வீதி | 603 | 645 | - | 1248 |
124 | 8 | அம்பேத்கர் தெரு, பென்னாகரம் ரோடு, முத்து மாரியம்மன் கோயில் தெரு, தங்கவேல் (எ) முனிசாமி தெரு, சிவராஜி ரோடு, சங்கம் ரோடு, எம்.ராஜி ரோடு, சிவாஜி ரோடு | 549 | 577 | 1 | 1127 |
121, 122 | 9 | இரயில்வே லைன் மெயின் ரோடு, இரயில்வே லைன் கிழக்கு ரோடு, இரயில்வே லைன் கிழக்கு புதிய காலனி, பழைய இரயில்வே லைன் ரோடு, வட்டார வளர்ச்சி காலனி, குடிசை காலனி | 749 | 769 | - | 1518 |
125 | 10 | பென்னாகரம் ரோடு, அரிச்சந்திரன் கோவில் தெரு, சஞ்சீவி சந்து, கோனோரி தெரு, சிட்டுமுனுசாமிதெரு, நித்யானந்தம் தெரு, அன்னை சத்யா நகர், நாவிதர் நகர் (பெருமாள் நகர்), சுப்பராயன் தெரு | 549 | 552 | - | 1101 |
130 | 11 | உழவர் தெரு மெயின் ரோடு, உழவர் தெரு சந்து 1, சந்து 2, சந்து 3, சந்து 4, மாணிக்கம் தெரு, நடேசன் தெரு, சுப்பிரமணிய சுவாமி மேல்தோப்பு வீதி | 597 | 588 | 1 | 1186 |
131 | 12 | அப்பாவு நகர் பிள்ளையார் கோயில் தெரு, அப்பாவு நகர் முதல் தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, 4 வது தெரு, 5 வது தெரு, 6 வது தெரு, அப்பாவு நகர் மெயின் ரோடு, அப்பாவு நகர், பிடமனேரி ரோடு | 375 | 404 | - | 779 |
132, 133, 134 | 13 | அண்ணா நகர் 1 வது தெரு, 2 வது தெரு, அண்ணா நகர், ராயப்பா காலனி, அண்ணா நகர் 3 வது தெரு, 4 வது தெரு, எம்.ஜி.ஆர் நகர் | 1369 | 1395 | - | 2764 |
126 | 14 | பிள்ளையார் கோவில் தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு, மயில் மண்டபத் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கோயில் மானியத் தெரு, கந்தசாமி சந்து வீதி, தட்சிணாமூர்த்தி மடம் தெரு | 583 | 603 | - | 1186 |
127 | 15 | கோபுரம் பழனியம்மாள் தெரு, காரியக்கார வையாபுரி தெரு, தியாகி தீர்த்தகிரியார் தெரு, அருணாசலம் தெரு, வ.உ.சி தெரு, தங்கசாலைத் தெரு, திரு.வி.க தெரு | 489 | 549 | - | 1038 |
135 | 16 | தெற்கு ரயில்வே லைன் ரோடு, திமோதியஸ் தெரு, தங்கவேல் தெரு, லட்சுமி காலனி, கணேசா காலனி, நாகப்பா காலனி, ஹைஸ்கூல் பிளே கிரௌன்ட் ரோடு, அதியமான் பைபாஸ் ரோடு | 486 | 490 | 1 | 977 |
139 | 17 | முகமது அலி கிளப் ரோடு, நரசன்குளம், செங்கோடிபுரம், கந்தசாமி வாத்தியார் தெரு 1, 2, 3, பெரியார் தெரு, நாச்சியப்பன் ரோடு, ராமலிங்கம் ரோடு | 699 | 729 | - | 1428 |
142 | 18 | அம்பலத்தாடி தெரு, அங்கு குருசாமி தெரு, விவேகானந்தா டவுன் ஹால் தெரு, வெங்கட்ராமன் தெரு, பாரதியார் தெரு, தேவரெத்தினம் தெரு, மல்லப்பன் தெரு, காவேரி தெரு, சின்னச்சாமித் தெரு, காசிம் மேஸ்திரி தெரு, அப்துல் முஜீப் தெரு, அகமத் பாஷா தெரு, ஆறுமுகம் தெரு, ராஜகோபால் தெரு, பஜணை தேர் நிலையம் ட்ரங்க் ரோடு, சின்னசாமி தெரு, அம்பலத்தாடி தெரு, ரங்கவிலாஸ்ஷெட் சந்து வீதி | 399 | 379 | - | 778 |
120 | 19 | மொளகன் சந்து, மசூதி கீழ்த் தெரு, தோளூரான் தெரு, திருவள்ளுவர் சந்து, கந்தசாமி குப்தா தெரு, பச்சியப்பன் தெரு, ரத்தினம் தெரு, கீழ் மஜீத் தெரு, காமராசர் தெரு, அண்ணா தெரு, அப்புகுட்டான் சந்து, ஓசூரான் சந்து, சின்னசாமி சந்து, மண்டபத் தெரு, சடையப்பன் தெரு | 468 | 466 | 1 | 935 |
123 | 20 | மாரியப்பன் வீதி, சின்னப்பன் வீதி, பெருமாள் கோவில் தெரு, சுப்ரமணியம் தெரு, ஊர் மாரியப்பன் வீதி, மாரியம்மன் கோவில் தெரு, புருடைய மாரியப்பன் வீதி, பெருமாள் வீதி, பச்சையப்பன் வீதி, நாரதன் வீதி, வடமலை வீதி, காளிவாத்தியார் வீதி, காராமணி தெரு, செல்வம் வீதி, கூலிமாரியப்பன் வீதி | 598 | 672 | - | 1270 |
144 | 21 | ஆஞ்சநேயர் கோயில் தெரு, விருபாட்சிபுரம் வீதி, சிவசுப்பிரமணியம் தெரு, தங்கவேல் தெரு, தேவாங்கர் தெரு, குப்பையன் தெரு, வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வீரமாசிரியம்மன் தெரு, முருகப்பன் தெரு, பச்சியப்பன் தெரு, மொட்டைபோயன் சந்து | 421 | 454 | - | 875 |
143 | 22 | ஹரிஹரநாத சுவாமி கோவில் தெரு, பூமாலைத் தெரு, சேனைத்தலைவர் தெரு (வி.ஆர்.ஜெகதீசன் தெரு), புதூர் மாரியம்மன் கோவில் தெரு, கடை வீதி, வெங்கட்ரமன சாமி கோவில் தெரு, வெங்கட்ராமன் தெரு, முனியப்ப செட்டி தெரு | 493 | 482 | - | 975 |
141 | 23 | டி.எம்.துரைசாமி தெரு, அகமத்கான் தெரு, அர்ச்சுணன் சந்து, பி.ஆர்.சுந்தரம் தெரு, சித்தவீரப்பன் தெரு, சி.கே.சீனிவாசன் தெரு, பி.ஆர்.சீனிவாசன் தெரு, வாசு தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு | 517 | 530 | - | 1047 |
140 | 24 | அண்ணாமலை கவுண்டர் தெரு, சத்திரம் மேல் தெரு, வீரராகவன் தெரு, முனியன் தெரு, நரசிம்மன் தெரு | 566 | 643 | - | 1209 |
145 | 25 | சத்திரம்மேல் தெரு சந்து வீதி, நஞ்சன் தெரு, கிடங்கு சந்து, கஸ்தூரிபாய் சந்து, மகாத்மா காந்தி ரோடு, சத்திரம் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சாலை விநாயகர் கோவில் ரோடு | 480 | 555 | - | 1035 |
146, 147 | 26 | கொல்லஅள்ளி ரோடு, சுண்ணாம்பு சூளை தெரு, குன்செட்டி குளம், வேடியப்பன் திட்டு, ராஜா மிஷன் ரோடு, சாலை விநாயகர் கோவில் ரோடு, மாணிக்கம் தெரு (கேம்சிங் தெரு), மிட்டாரெட்டிஹள்ளி ரோடு, குருவன் தெரு, குன்னன் தெரு | 1028 | 1005 | 1 | 2034 |
148, 149 | 27 | காந்தி நகர் 1 வது தெரு, 2 வது தெரு, 3 வது தெரு, 4 வது தெரு, 5 வது தெரு, 6 வது தெரு, நரசிம்மன் தெற்கு தெரு, பாரதியார் தெரு (நாட்டாண்மைபுரம்), நாட்டாண்மைபுரம், வெங்கட்ராம சர்மா தெரு, உரிகம் சின்னதாய் காலனி, போலீஸ் காலனி | 2039 | 2048 | 1 | 4088 |
138 | 28 | நெசவாளர் காலனி 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு, நேதாஜி பை-பாஸ் ரோடு, பெரியசாமி காலனி, சின்னசாமி தெரு, பிடமனேரி ரோடு | 526 | 557 | - | 1083 |
136, 137 | 29 | நெடுமாறன் நகர் 1 வது தெரு, 2 வது தெரு, 3 வது தெரு, 4 வது தெரு, 5 வது தெரு, 6 வது தெரு, 7 வது தெரு, 8 வது தெரு, 9 வது தெரு, சின்னுவாத்தியார் ரோடு, துரைசாமி ரோடு - 1, 2, சூடாமணி தெரு, வைண்டிங் டிரைவர் சின்னசாமி தெரு, வேணுகோபால் தெரு, கமலா லட்சுமி காலனி, ரயில்வே ஸ்டேஷன் பிராட்வே ரோடு | 735 | 776 | - | 1511 |
150, 151 | 30 | அம்பேத்கர் காலனி, அம்பேத்கர் காலனி - 1, 2, 3, அந்தோணி காலனி, சேலம் ரோடு 1, 2, அமுதம் காலனி 1வது கிராஸ், 2வது கிராஸ், 3வது கிராஸ், 4வது கிராஸ், பிஎஸ்என்எல் அலுவலர் குடியிருப்பு | 850 | 947 | - | 1797 |
152, 153 | 31 | பாரதிபுரம் - 1, 2, 3, 4, பாரதிபுரம் 5 - ஸ்டேட் பேங்க் காலனி, மாரியம்மன் கோவில் தெரு, சங்கரன் தெரு, அய்யம் பெருமாள் தெரு - 1,2, எல்.ஆர். மாணிக்கம் தெரு, பாரதிபுரம் ஈ.பி காலனி - 1, 2, 3, பாரதிபுரம் ஈ.பி காலனி 5 வது மேற்கு குறுக்கு தெரு, 66 அடி ரோடு, குமரபுரி காலனி, பாரதிபுரம் - 6 | 846 | 860 | - | 1706 |
154, 155 | 32 | பிள்ளையார் கோயில் தெரு, தண்டுபாதை தெரு, தீத்தி அப்பாவு முதலி தெரு, பஜனை கோயில் தெரு, தியாகி தீர்த்தகிரியார் தெரு, கந்தசாமி குப்தா தெரு, தியாகி லட்சுமியம்மாள் லைன், தோப்புத் தெரு 1, 2, 3, தேசபந்து நீர் நிலைய தெரு | 1015 | 1059 | - | 2074 |
156, 157 | 33 | பெருமாள் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் நடு வீதி, பொன்னுசாமி தெரு, எஜமான் மாதன் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, குள்ளன் தெரு, போத்தராஜா தெரு, ஜடைய கவுண்டர் தெரு, வடகரையான் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, வ.உ.சி தெரு, செல்லன் தெரு, பஞ்சாங்கன் தெரு, சகாதேவ வாத்தியார் தெரு, பூசாரி தெரு, புட்டன் தெரு, கோவிந்தன் மேஸ்திரி சந்து, கசாப்புகாளியப்பன் தெரு, வெங்கட்ராமன் தெரு, பச்சியப்பன் சந்து வீதி, எறங்காட்டுக்கொட்டாய் | 932 | 952 | - | 1884 |