பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும்.
பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது.
மாரியம்மன் திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது.
பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.