பாப்பாரப்பட்டி பேரூராட்சி
பாப்பாரப்பட்டி (ஆங்கிலம்:Papparapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இந்த ஊரின் அசல் பெயர் பல்லூர் பேட்டை, பின்னர் இது அதிகாரப்பூர்வமாக உள்ளூர் அரசாங்கத்தால் பாப்பாரப்பட்டி என மறுபெயரிடப்பட்டது. பாப்பாரப்பட்டி என்ற பெயர் பார்ப்பனர் பேட்டை என்பதிலிருந்து உருவானது, அதாவது பிராமண சமூக மக்கள் வசிக்கும் இடம்.
அஞ்சலக எண் : 636809
பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் அதிகமாக விவசாயம் மற்றும் நெசவு தொழில் நடைபெறுகிறது. பாப்பாரபட்டியில் புதியதாக 40 இலட்சரூபாய் செலவில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டு 18, 2011 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனருகில் பாலக்கோடு தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ளது.
பிக்கிலி மலை மற்றும் ஹோகனக்கல் நீர்வீழ்ச்சி ஆகியவை அருகிலுள்ள இடங்களாகும்.
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 16 கிமீ; வடக்கில் கிருஷ்ணகிரி 40 கிமீ; தெற்கில் சேலம் 90 கிமீ தொலைவில் உள்ளது.
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 42 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,014 வீடுகளும், 12,174 மக்கள்தொகையும் கொண்டது.
பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.
பேரூராட்சி மொத்த வார்டுகள் - 15
துணைத் தலைவர்
வார்டு 1:
வார்டு 2:
வார்டு 3:
வார்டு 4:
வார்டு 5:
வார்டு 6:
வார்டு 7:
வார்டு 8:
வார்டு 9:
வார்டு 10:
வார்டு 11:
வார்டு 12:
வார்டு 13:
வார்டு 14:
வார்டு 15: