உள்ளூர் செய்திகள்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சாமனூர் கிராமப் பஞ்சாயத்து செய்திகள்
நாள்: 12-7-2020, ஞாயிறு 10.00am – 11.00am
![water issue photos](http://thagadoor.in/dharmapuri/palacode/samanur/images/counseling-12-7-2020.jpg)
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சாமனூர் கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர்
திருமதி. அம்பிகா பாக்யராஜ் அவர்கள்
12.07.2020 ஞாயிறு காலை 10.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக
பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம் (INCERD, CEO, SOFTWARE DEVELOPMENT COMPANY), தருமபுரி அவர்களை தலைமை விருந்தினராக அழைத்திருந்தனர்.
திரு. பாக்யராஜ் மற்றும் திரு. காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தனர். 2 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான
வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார்.
திருவாளர்கள் சந்திரசேகர், B.Com, சண்முகம், B.Com. ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றார்கள். இறுதியாக
திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.
06/07/2020 : தருமபுரி(ம)பாலக்கோடு(வ)சாமனூர்ஊராட்சிக்கு உட்டபட்ட நல்லம்பட்டி முதல் அருள்பிரகாஷ் வீடு வரை நீண்ட காலமாக இந்த தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியா நிலையில் இருந்தது இதற்கு மாறாக எங்கள் தலைவர் குட்டி(எ)வெங்கடேசன் உடனடி நடவடிக்கை எடுத்து அனைவரும் பயன்படும் வகையில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைத்தார்!!!!!!நம்மை காக்க!!!
நாம் காக்க வேண்டியது தண்ணீர்💧
பணத்தை தண்ணீராக செலவழி என்று
சிலேடையாக சொல்ல முடியாது🤷🏻♂ இன்று
தண்ணீரை பணம் போல் சிக்கனமாக செலவழி
என்னும் நிலைமைதான் உலகெங்கும்
தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை
புரிந்து கொள்வோம் பசுமையின்றி நீரில்லை🌾
மரம் வளர்ப்போம் மழை பெறுவும்
இருக்கும் நீராதாரத்தை💧உயிராக காப்போம்.......🖤❤
இங்கணம்...அம்பிகா பாக்யராஜ், பஞ்சாயத்து தலைவர், சாமனூர்
30/06/2020 : நீரின்றி அமையாது உலகு... மனிதனின் அன்றாட வாழ்க்கையில் உணவின்றி வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லையென்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது. சாமனூர் கீழ் தெருவில் இந்த தண்ணீர் பிரச்சனை 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து இன்று இடைவிடா முயற்சியுடன் தலைவர் வெங்கடேசன்(எ) குட்டி, கவுன்சிலர் லாவண்யா ராஜா அவர்களின் செயல்பாட்டின் மூலம் வீட்டின் அருகே தண்ணீர் வருகிறது.
இங்கணம்...அம்பிகா பாக்யராஜ், பஞ்சாயத்து தலைவர், சாமனூர்
சாமனூர் கிராமப்பஞ்சாயத்து
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து சாமனூர்.
குக்கிராமங்கள் :சாமனூர், ஜீவா நகர், தொட்டபடக்காண்ட அள்ளி, நல்லாம்பட்டி, கொவில்பட்டி, இந்திரா நகர், பனைமரத்துக்கொட்டாய், சேர்மேன் கொட்டாய், எம்.ஜி.ஆர். நகர்.
![](images/samanur1.jpg)
இங்குள்ள மக்கள் பேசும் உள்ளூர் மொழி தமிழ், தெலுங்கு, கன்னடம். திமுக, அதிமுக, பா.ம.க. ஆகியவை இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.
சட்டமன்றத் தொகுதி: பாலக்கோடு
மக்களவைத் தொகுதி: தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி
மாரண்டஹள்ளி ரயில்வே நிலையம் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.
பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமங்கள்