உள்ளூர் செய்திகள்!
நாள்: 11-7-2020, 11.00am – 1.00pm
![career development programme](http://thagadoor.in/dharmapuri/palacode/koravandahalli/images/parthasarathy meeting koravandahali -11-7-2020.jpg)
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொரவாண்டஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர்
திருமதி. சரோஜா சுந்தரேசன் அவர்கள்
11.07.2020 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக
பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம் (INCERD, CEO, SOFTWARE DEVELOPMENT COMPANY), தருமபுரி அவர்களை தலைமை விருந்தினராக அழைத்திருந்தனர்.
திரு. சுந்தரேசன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் 1 மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார். 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர்.
சொற்பொழிவு முடிந்தபின் இளைஞர்கள் மற்றும் மகளிர் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான
வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார்.
திருவாளர்கள் சாந்தகுமார் (BE CSE), சுதாகர் (BE CSE), பார்த்திபன் (B.Sc. Agri), அஸ்வினி(B.Sc. Chemistry), ரம்யா (M.Sc. Microbiology ), நிவேதிதா, B.Sc., B.Ed. (Physics), ரஞ்சித் (B.E. ECE) ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றார்கள். இறுதியாக
திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.
கொரவாண்டஅள்ளி கிராமப்பஞ்சாயத்து
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து கொரவாண்டஅள்ளி.
குக்கிராமங்கள் : சின்னசெட்டிப்பட்டி, ஆலமாரப்பட்டி, சிக்கபடகாண்டள்ளி, சிக்கபடகாண்டள்ளி காலனி.
இங்குள்ள மக்கள் பேசும் உள்ளூர் மொழி தமிழ், தெலுங்கு, கன்னடம். பா.ம.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.
சட்டமன்றத் தொகுதி: பாலக்கோடு
மக்களவைத் தொகுதி: தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி
மாரண்டஹள்ளி ரயில்வே நிலையம் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.
பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமங்கள்