உள்ளூர் செய்திகள்!
05/08/2020
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கணபதி (பெல்ரம்பட்டி) கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திரு. சுப்பிரமணி அவர்கள் 05.08.2020 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய சந்திப்பு நடந்தது. அதற்கு பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிப்பதாக திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் உறுதி அளித்தார். இந்த சந்திப்பை திரு. பெரியசாமி, ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் மற்றும் அவருடைய நண்பர் மாதம்பட்டி திரு. முருகேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
கணபதி (பெல்ரம்பட்டி) கிராமப்பஞ்சாயத்து
கணபதி(திருமல்வாடி) ஊராட்சி (Ganapathi Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இது மாவட்ட தலைமையகமான தர்மபுரியிலிருந்து வடக்கு நோக்கி 26 கி.மீ, மாநில தலைநகர் சென்னையிலிருந்து 294 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கணபதியை கிழக்கு நோக்கி காரிமங்கலம் பிளாக், காவேரிபட்டினம் பிளாக், தெற்கே தர்மபுரி பிளாக், பென்னாகரம் பிளாக் ஆகியவை உள்ளன.
சட்டமன்றத் தொகுதி: பாலக்கோடு .
மக்களவைத் தொகுதி: தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4542 ஆகும்.
இவர்களில் பெண்கள் 2158 பேரும் ஆண்கள் 2384 பேரும் உள்ளனர்.
பஞ்சாயத்துக்கு உட்பட்ட குக்கிராமங்கள்
வார்டு உறுப்பினர்கள்
P.சக்திவேல்
வார்டு 1: சீங்காடு
E. மாதம்மாள்
வார்டு 2: கரிகுட்டனூர்
R. தங்கவேல்
வார்டு 3: பெள்ளுஅள்ளி
M. சாலம்மாள்
வார்டு 4: பெல்ரம்பட்டி
M.மாதம்மாள்
வார்டு 5: பெல்ரம்பட்டி
S. பெரியசாமி
வார்டு 6: திருமல்வாடி
K. பூங்கொடி
வார்டு 7: பெல்ரம்பட்டி
D. சாவித்திரி
வார்டு 9: திருமல்வாடி
பாலக்கோடு - கிராமப் பஞ்சாயத்துகள் - 32
(முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)