இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஅள்ளி என 3 உள்வட்டங்கள் கொண்டது.
இப்பேரூராட்சி பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. இங்கு பாலக்கோடு தொடருந்து நிலையம் உள்ளது. இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 23 கிமீ; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கிமீ; கிழக்கில் காரிமங்கலம் 17 கிமீ; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கிமீ., தொலைவில் உள்ளது.
2.56 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,948 வீடுகளும், 20,959 மக்கள்தொகையும் கொண்டது. 3,46,489 மக்கள் பாலக்கோடு வட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட குறைவானது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும். இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 16 சதவிகிதம்.
பாலக்கோடு வட்டம் : முக்கியமான இடங்கள்
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
பாலக்கோடு தமிழ்நாடு, தருமபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி - வெற்றி பெற்றவர்கள் விபரம் (1951 முதல் இன்று வரை)
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
தமிழ்நாடு மாநிலம் |
2016 | கே. பி. அன்பழகன் | அதிமுக |
2011 | கே. பி. அன்பழகன் | அதிமுக |
2006 | கே. பி. அன்பழகன் | அதிமுக |
2001 | கே. பி. அன்பழகன் | அதிமுக |
1996 | ஜி. எல். வெங்கடாசலம் | திமுக |
1991 | எம். ஜி. சேகர் | அதிமுக |
1989 | கே. மாதப்பன் | அதிமுக (ஜெ) |
1984 | பி. தீர்த்தராமன் | காங்கிரசு |
1980 | எம். பி. முனிசாமி | அதிமுக |
1977 | பி. எம். நரசிம்மன் | அதிமுக |
1971 | எம். வி.காரிவேங்கடம் | திமுக |
மெட்ராஸ் மாநிலம் |
1967 | கே. முருகேசன் | காங்கிரசு |