மாரண்டஅள்ளி பேரூராட்சி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மாரண்டஅள்ளி.
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 45 கிமீ; வடக்கில் ஒசூர் 65 கிமீ; கிழக்கில் கிருஷ்ணகிரி 45 கிமீ; மேற்கில் பெங்களூர் 90 தொலைவில் உள்ளது. 1.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,179 வீடுகளும், 12,451 மக்கள்தொகையும் கொண்டது.
இந்த நகரத்தின் பிரதான சாலை வழியாக இணைக்கும் ஊர்கள்
1. கிழக்கே கிருஷ்ணகிரி (வழி:வெள்ளிசந்தை, காவேரிப்பட்டிணம்)
2. மேற்கே தேன்கனிக்கோட்டை (வழி:பஞ்சபள்ளி டேம், ரத்னகிரி)
3. வடக்கே ஒசூர் (வழி: காடுசெட்டிப்பட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அளேசீபம்)
4. தெற்கே சேலம் (வழி: அ.மல்லாபுரம், பாலக்கோடு, தர்மபுரி, தொப்புர்,ஓமலூர்).
![](images/marandahalli.jpg)
இந்த நகரத்தின் தொடர்வண்டி நிலையம் மாரண்டஅள்ளி ஆகும். இந்த தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் காரைக்கால் வரை செல்லலாம்.
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 581 மீட்டர் (1906 அடி) உயரத்தில் இருக்கின்றது.
பேரூராட்சி மொத்த வார்டுகள் - 15
துணைத் தலைவர்
வார்டு 1:
வார்டு 2:
வார்டு 3:
வார்டு 4:
வார்டு 5:
வார்டு 6:
வார்டு 7:
வார்டு 8:
வார்டு 9:
வார்டு 10:
வார்டு 11:
வார்டு 12:
வார்டு 13:
வார்டு 14:
வார்டு 15: