அனுமந்தபுரம் கிராமப்பஞ்சாயத்து - காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***

காரிமங்கலம் வட்டம் : முதல் பக்கம் செல்ல இங்கே அழுத்தவும்

தகடூர் முன்னேற்றம் முதல் பக்கம்

உள்ளூர் செய்திகள்!

20/10/2020  hanumanthapuram கிராமப் பஞ்சாயத்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. லீலாவதி அவர்கள் 20.10.2020 செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய சந்திப்பு நடந்தது. அதற்கு பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு சார்ந்த கணினிப் பயிற்சி – DTP மற்றும் Web Site Design ஆகிய படிப்புகள் பற்றிய பயிற்சிஅளிப்பதாக திரு. பார்த்தசாரதி வேணுகோபால் அவர்கள் உறுதி அளித்தார். நாளை (21.10.2020) முதல் 1 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிப்பதாக உறுதி செய்யப்பட்டது. பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து தருவதாக திருமதி. லீலாவதி, பஞ்சாயத்துத் தலைவர், திருமதி. தீபா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆகியோர் உறுதியளித்தனர். இந்த சந்திப்பை செல்வி. திவ்யா மற்றும் பரத், ஒருங்கிணைப்பாளர்கள், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆலோசனைக் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

அனுமந்தபுரம் கிராமப்பஞ்சாயத்து

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து அனுமந்தபுரம்.


இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் தொகுதியில் உள்ள ஒரு கிராமம் அனுமந்தபுரம்.

இது மாவட்ட தலைமையகமான தர்மபுரியிலிருந்து வடக்கே 25 கி.மீ தொலைவிலும், காரிமங்கலத்தில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் சென்னையிலிருந்து 287 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அனுமந்தபுரம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 643223 ஆகும்.

கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 718.42 ஹெக்டேர்.

அனுமந்தபுரம் அஞ்சலக எண் 636802, அஞ்சல் தலைமை அலுவலகம்

அனுமந்தபுரம். பழைய நாட்களில், இந்த கிராமத்தில் நிறைய குரங்குகள் தங்கியிருந்தன. எனவே கடவுள் "ஹனுமான்" என்பதன் அடையாளமாக இந்த கிராம மக்கள் ஹனுமந்தபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தில் ஏராளமான குரங்குகள் நிரந்தரமாக தங்கியிருப்பதை இப்போது நாம் காணலாம். இந்த கிராமத்தில் அனுமன் கோயில் மிகவும் பிரபலமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது.

ஹனுமந்தபுரம் உள்ளூர் மொழி தமிழ். ஹனுமந்தபுரம் கிராமம் மொத்த மக்கள் தொகை 3940, வீடுகளின் எண்ணிக்கை 869.

ஆண் மக்கள் தொகை 1948, பெண் மக்கள் தொகை 1992.

பெண் மக்கள் தொகை 50.6%, கிராம கல்வியறிவு விகிதம் 60.8%, பெண் கல்வியறிவு விகிதம் 27.1%.

DMK , AIADMK , PMK இந்த பகுதியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்.




வார்டு உறுப்பினர்கள்


K. ஷோபா
வார்டு 1: சொன்னம்பட்டி

P.ஞானம்மாள்
வார்டு 2: சொன்னம்பட்டி

M. தேவிகா
வார்டு 3: சொன்னம்பட்டி

M. மாரம்மாள்
வார்டு 4: சொன்னம்பட்டி

A. இஸ்மாயில்
வார்டு 5: அனுமந்தபுரம்

V. வெங்கடேசன்
வார்டு 7: அனுமந்தபுரம்

S. கவிதா
வார்டு 8: மதனேரிகொட்டாய்

K. சாந்தி
வார்டு 9: மொட்டையன்கொட்டாய்

காரிமங்கலம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 30

(குறிப்பிட்ட பஞ்சாயத்து பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)