எலுமிச்சனஅள்ளி கிராமப்பஞ்சாயத்து - காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம்

*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***

காரிமங்கலம் வட்டம் : முதல் பக்கம் செல்ல இங்கே அழுத்தவும்

தகடூர் முன்னேற்றம் முதல் பக்கம்

உள்ளூர் செய்திகள்!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமப் பஞ்சாயத்து செய்திகள்


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமப் பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் திரு. S. சென்னமூர்த்தி அவர்கள் 19.07.2020 ஞாயிறு காலை 11.00 மணியளவில் இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள படித்த இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான முன்னேற்றத்துக்காக ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பேச்சாளராக பேராசிரியர் திரு. பார்த்தசாரதி வேணுகோபால், நிர்வாகி தகடூர் முன்னேற்றம், தருமபுரி அவர்களை அழைத்திருந்தார். 13 இளைஞர்கள் திருவாளர்கள் பெரியசாமி, மணி, தவமணி, நவீங்குமார், அருண்குமார், ப்ரதாப், சக்திவேல், செல்வதுரை, நந்தகுமார், ஜெயச்சந்திரன், கவுரன், அன்பு மற்றும் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான வேலை வாய்ப்பு, உயர் கல்வி மற்றும் கணினி பயிற்சி படிப்புகள் தொடர்பான சந்தேகங்களுக்கு திரு. பார்த்தசாரதி வேணுகோபால் சிறப்பாக விளக்கம் அளித்தார். இறுதியாக திரு. நாகராஜ். டி , ஒருங்கிணைப்பாளர், தகடூர் முன்னேற்றம், வெள்ளிசந்தை, பாலக்கோடு வட்டம் அவர்கள் நன்றி கூற கலந்தாய்வுக் கூட்டம் இனிதே முடிவுற்றது.

எலுமிச்சனஅள்ளி கிராமப்பஞ்சாயத்து

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து எலுமிச்சனஅள்ளி.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, எலுமிச்சனஅள்ளி கிராமத்தின் கிராமக் குறியீடு 643224 ஆகும். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு தெஹ்ஸில் எலுமிச்சனஅள்ளி கிராமம் அமைந்துள்ளது. இது துணை மாவட்ட தலைமையகம் பாலக்கோடுவிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைமையகமான தர்மபுரியிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, எலுமிச்சனஅள்ளி ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும்.

இது மாவட்ட தலைமையகமான தர்மபுரியிலிருந்து வடக்கு நோக்கி 28 கி.மீ தொலைவிலும், காரிமங்கலத்திலிருந்து 9 கி.மீ. தூரத்திலும், மாநில தலைநகர் சென்னையிலிருந்து 283 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 1523.64 ஹெக்டேர். எலுமிச்சனஹள்ளி மொத்த மக்கள் தொகை 5,350. எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் சுமார் 1,285 வீடுகள் உள்ளன. காரிமங்கலம் எலுமிச்சனஹள்ளிக்கு அருகிலுள்ள நகரம்.

எலுமிச்சனஅள்ளி அஞ்சலக எண் 636805, அஞ்சல் தலைமை அலுவலகம் மல்லுப்பட்டி.

எலுமிச்சனஅள்ளி உள்ளூர் மொழி தமிழ்.

எலுமிச்சனஅள்ளி கிராமம் மொத்த மக்கள் தொகை 5350 மற்றும் வீடுகளின் எண்ணிக்கை 1285.

பெண் மக்கள் தொகை 48.2%.

கிராம கல்வியறிவு விகிதம் 57.1%.

பெண் கல்வியறிவு விகிதம் 24.3%.

வார்டுகள் - 9



அமுதா நாகராஜ் (அ.தி.மு.க)

ஒன்றியக்குழு உறுப்பினர்


M. மங்கை (பா.ம.க.)

வார்டு 7, பஞ்சாயத்து துணைத் தலைவர்

A. சாந்தகுமார்

ஊராட்சி செயலாளர்

வார்டு உறுப்பினர்கள்


சாம்ராஜ் முருகன்
வார்டு 1: எலுமிச்சனஅள்ளி

பூர்ணி சின்னசாமி
வார்டு 2: நாய்க்கன்கொட்டாய்

நிர்மலா மாதப்பன்
வார்டு 3: வாகனகொட்டாய்

மாதேஸ்
வார்டு 4: எலுமிச்சனஅள்ளி காலனி

பத்தி
வார்டு 5: முதலிப்பட்டி

சௌந்தர்யா மகேந்திரன்
வார்டு 6: சின்ன முதலிப்பட்டி

பெருமாள்
வார்டு 8: கொட்டாவூர்

சேட்டு
வார்டு 9: அத்திகுட்டனஅள்ளி

காரிமங்கலம் - கிராமப் பஞ்சாயத்துகள் - 30

(குறிப்பிட்ட பஞ்சாயத்து பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே உள்ள பஞ்சாயத்து பெயரை அழுத்தவும்)