பாலக்கோடு ஸ்ரீ பரமஹம்ச யோகாஸ்சரமம் கூறுகிறது.
இந்த பூலோகத்தில் ஜாதி மதம் ஆண் பெண் பேதமில்லாமல் அனைத்து மனிதர்களுக்கும் மூன்று சரீரங்கள் உண்டு.
இதை படிக்கின்ற உங்களுக்கும் உண்டு. அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.
உங்களுக்கும் அது உண்டு.
இந்த ஆத்மாவை உங்களுக்கு பரிச்சயம் இருக்கிறதா?
ஒவ்வொரு மனிதர்குள்ளும் பத்து விதமான பிராணங்கள் (வாயுக்கள்) வேலைக்காரர்களாக இருந்து வேலை செய்வதுண்டு.
அவைகள் உங்கள் உடலிலும் வேலை செய்வதுண்டு.
அது தெரியுமா?
திறி குணங்கள் என்பது இந்த உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது.
அதுதான் உங்களையும் இயங்கச் செய்கிறது.
அது தெரியுமா?
உங்களைப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டமா?
பிறப்பும் இறப்பும் ஏன் உண்டாகிறது?
உங்களுக்கும் அது உண்டு.
அது ஏன் தெரிய வேண்டாமா?
சுகம் மட்டும் போதாதா?
துக்கம் ஏன் வர வேண்டும்?
ஒவ்வொரு மனிதரிலும் ஒட்டு மொத்தமாக 61 தத்துவங்கள் உண்டு.
அத்தனையும் உங்களிலும் உண்டு அது தெரியுமா?
பாலக்கோட்டிலிருந்து மணியகாரன்கொட்டாய், ஸ்ரீ அருள்மிகு பால்வண்ணநாதர் திருகோவில் செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீ மோகன் ரைஸ்மில் பக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பரமஹம்ச யோகா ஸ்சரமம் மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கிறது.
சுக வாழ்விற்கு வழிகாட்டுகிறது. வாழவேண்டியது உங்கள் பொறுப்பு.
உங்களை அன்புடன் இந்த ஆசிரமம் வருக வருக என்று வரவேற்கிறது.
ஆசிரமத்தின் நோக்கம்
சத்ய பாலனத்தினாலும் தர்ம ஆசரனத்தினாலும் ஜன சமுதாயத்தை மேலோங்கச் செய்து சாந்தியும் சமாதனமும் வளர்த்து, வேறுபாடுகளை அகற்றி, கடவுள் பக்தியும் தேசபக்தியும் வளர்த்து, ஆத்மீகவும் சம்சாரிக்கவும் (குடும்ப வாழ்க்கை) ஆகிய உன்னதிக்கு வழிகாட்டுவதாகும்.
செயல்முறைகள்
1. ப்ராணாயாமம்,தியானம்,அந்தர்யோகம், வேதவிதிப்ரகாம் நாமஜெப வகுப்புகள், யோகாசன கீதை பண்பு வகுப்புகள் (மாணவர்களுக்காக).
2. கிராமங்கள்தோரும் குடும்ப சங்கமம், ஸ்த்ஸங்கம் (மாதம் ஒரு முறை)
3. திருவிளக்கு புஜை, பஜனை, புருஷார்த்த விவரணம், கீதையின் நிஷ்காம கர்மயோக விளக்கம், நூலகம், முதியோர் இல்லம், கோ சாலை, மருத்துவம், அன்பு இல்லம், பண்பாடு மற்றும் கலை வளர்ச்சி (பரதநாட்டியம்).